Connect with us

Cricket

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் திடீர் ஓய்வு !! 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான மிட்செல் ஜான்சன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களில் முதன்மையானவர் மிட்செல் ஜான்சன்.

இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 313 விக்கெட்டுகளும், 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 239 விக்கெட்டுகளும், 30 டி-20 போட்டிகளில் 38 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார்.

உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் கடந்த 2015ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சா்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனைத் தொடா்ந்து ஐ.பி.எல்., பிக் பாஷ் லீக் உள்ளிட்ட 20 ஓவா் தொடா்களில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பத்திரிகை ஒன்றிற்கு அவா் அளித்த பேட்டியில் தனது ஓய்வு முடிவை தெரிவித்துள்ளார்.  அடுத்த ஆண்டு வரை உள்ளூா் போட்டிகளில் விளையாடலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதற்கு எனது உடல் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரியவில்லை. அவ்வாறு விளையாடினாலும் எனது அணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முடியுமா என்பது தெரியாது. நான் எனது கடைசி பந்தை வீசிவிட்டேன். கடைசி விக்கெட்டையும் கைப்பற்றி விட்டேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See