Connect with us

Cricket

ஆஸ்திரேலிய தொடருக்கான டி20 அணி அறிவிப்பு: இதிலாவது தோனி இருக்கிறாரா?

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இன்னும் இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. இதையடுத்து இரு அணிகளும் மூன்று டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து, முதலில் மூன்று டி 20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த ஆறு டி 20  போட்டிக்கான இந்திய அணி புனேவில் நேற்று அறிவிக்கப்பட்டது.

கடந்த சில வருடங்களாக ரன் குவிக்க தடுமாறி வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான தோனி, நீக்கப்பட்டுள்ளார். அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு தோனி நீக்கப்படுவது இதுதான் முதல் முறை. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி 20 தொடருக்கு கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.

ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணி:

விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், சேஹல், வாஷிங்டன் சுந்தர், குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See