Connect with us

Cricket

ஆஸ்திரேலிய தொடர் இந்திய அணிக்கே; சேன் வாட்சன் ஆருடம் !!

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருந்தாலும் அடுத்ததாக நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணியே வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடரை  இந்திய அணியே வெல்லும் என சேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேன் வாட்சன் பேசியதாவது, “இதற்கு முன்றைய ரெக்கார்டுகளின்படி, ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியுள்ளனர். விராட் கோலி, ராகுல், ரஹானே ஆகியோர் ஆஸ்திரேலியாவில் ரன்களை குவித்துள்ளனர். எனவே இங்கிலாந்தில் மாதிரி அல்லாமல் ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவர் என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See