Connect with us

Cricket

இங்கிலாந்திற்கு தர்ம அடி கொடுத்த இந்தியா- இரண்டாம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் வீடியோ

நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதலில் விளையாடிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் விராட் கோலி 97, ரகானே 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்கள் சாய்த்தனர்.
முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இரண்டாம் நாளான இன்று மேற்கொண்டு 22 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 128 ரன்னிற்குள் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்தது. ரூட், பெர்ஸ்டோவ் உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை பாண்ட்யா சாய்த்தார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See