Connect with us

Cricket

இங்கிலாந்து அணிக்கு பெரும் அடி; முக்கிய வீரர் விலகல் !!

காயம் காரணமாக இந்திய அணியுடனான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இருந்தும் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பாரிஸ்டோவ் விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் வெற்றியை நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டியின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பாரிஸ்டோவ், இந்திய அணியுடன் எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See