Connect with us

Cricket

இங்கிலாந்து அணியில் இனி இவரை எடுக்காதீர்கள்: கெவின் பீட்டர்சன் காட்டம்!!

இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜென்னிங்ஸ், ஆசிய கண்டத்தில் சரியாக விளையாடாத பிராட் ஆகியோரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘433 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் 32 வயதான ஸ்டூவர்ட் பிராட், சொந்த மண்ணை விட்டு வெளியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியது கிடையாது.

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. அவரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கினால், நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்.

இந்தியாவிற்கு எதிராக 9 இன்னிங்சில் ஜென்னிங்ஸ் 163 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரை நீக்க வேண்டும். ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரை தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறக்க வேண்டும்’’ என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See