Connect with us

Cricket

இங்கிலாந்து அணியுடனான தோல்விக்கு இவர்தான் காரணம் ஹர்பஜன் சிங் காட்டம் !!

இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் என இந்திய அணியின் சீனியர் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரையும் இழந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்விக்கு அஸ்வினை காரணம் என ஹர்பஜன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற சவுத்காம்ப்டன் மைதானம் லெக் ஸ்பின்னர்களுக்கு சாதகமானது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்ட போதும் அஸ்வின் தனது பங்களிப்பை சரியா செய்யத் தவறியதால் இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டது இந்த தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See