Connect with us

Cricket

இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்த கேஎல் ராகுல் மற்றும் பன்ட் : ஹைலைட்ஸ் வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டே சென்றாலும், மறு முனையில் அதிரடி குறையாமல் கே.எல்.ராகுல் ரன்களை குவித்தார். 118 பந்துகளில் அதிரடி சதத்தினை அவர் பதிவு செய்தார். அதேபோல், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ரிஷப் பண்ட் 117 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 300 ரன்களை விரைவாக கடந்தது.

இந்திய அணி படுதோல்வி அடையும் என்ற நிலையில் இருந்து, வெற்றி பெறலாம் என்ற இடத்துக்கு இந்த ஜோடி கொண்டு வந்தது. ஆனால், 149 ரன்னில் கே.எல்.ராகுலும், 114 ரன்னில் ரிஷப் பண்ட்டும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்பொழுது 328 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்களை இழந்தது. மேற்கொண்டு 17 ரன்கள் சேர்ப்பதற்குள் 345 ரன்னிற்கு இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால், 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See