Connect with us

Cricket

இங்கிலாந்தை சுருட்டி மூட்டை கட்டிய பாண்டியா!! 161க்கு ஆல் அவுட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி 329 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 54 ரன்கள் வரை நிதானமாக ஆடியது. பின்னர் இஷாந்த் ஷர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இணைந்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை அடுத்தடுத்து வீழ்த்தினர்.

அதன் பின்னர் 105 ரன்கள் வரை நிதானமாக ஆடிய இங்கிலாந்து அணி பாண்டியா பந்து வீச வந்தவுடன் அவரைக் கண்டு மிரண்டு தனது விக்கெட்டுகளை சீட்டு கட்டாக சரித்துவிட்டது.

பாண்டியா ஓவர் வீச வந்த முதல் பந்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின்னர் தனது இரண்டாவது ஓவரில் 2 விக்கெட்டுகளையும் மூன்றாவது ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சுருட்டி வீசினார்.

பாண்டியா இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பின்னர் தன் பங்கிற்கு போராடிய பட்லர் 32 பந்துகளுக்கு 39 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See