Connect with us

Cricket

இங்கிலாந்தை பழீ தீர்த்தது இந்தியா; 203 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி 161 ரன்கள் மட்டுமே ஆல் அவுட்டானது.

இதன் பிறகு 168 ரன்கள் முன்னிலையுடன்  இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 352 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி 521 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதன் பிறகு 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி 317 ரன்கல் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See