Connect with us

Cricket

இதனால் தான் தோல்வி அடைந்தோம்: டென்சனில் கேப்டன் விராட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.  இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி நேற்று உச்ச கட்டத்தை நெருங்குகியது.

இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. இந்த இலக்கை நெருங்கி ஓடிய இந்திய அணி வழக்கம்போல் தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய ரசிகர்களுக்கு தலைவலியை கொடுத்தது. அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜின்கியா ரஹானே ஆகியோர் நிலைத்து நின்று ஆடினார். இருவரும் கடுமையாக போராடியும் கூட இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

வழக்கம்போல் அதன் பின்னர் வந்த இந்திய வீரர்கள் சீட்டு கட்டாக சரிய, 60 ரன்களில் தோல்வி அடைந்தது இந்தியா ,

தோல்விக்கு பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி தோல்வி குறித்த காரணத்தை பற்றி பேசி பேசினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…..

அந்த இலக்கை எங்களுக்குக் கொடுப்பதற்க்காக இங்கிலாந்து நன்றாக விளையாடியது. அந்த இலக்கு சற்று கடினமானதுதான் ஆனால் நம்மில் அனைவரும் ஓரளவிற்கு பங்களித்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்.

அதே போல் ஆடுகளத்தின் தன்மையும் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பந்து நன்கு திரும்ப ஆரம்பித்தது. அதனை இங்கிலாந்து வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

நேற்று இரவு வரை நாம் வெற்றி பெற 50 சதவீத வாய்ப்புகள் இருந்தது. நாம் நல்ல துவக்கத்தை கொடுக்கவும் தவறிவிட்டோம். அந்த நாள் மிகவும் கடினமாக அமைந்துவிட்டது. இதனை ஏற்படுத்திய அவர்களுக்குத்தான் இந்த பெருமை சேரும்.

ஆனால் இப்படி சீட்டுக்கட்டு போல் சரிவோம் என்று நான் நினைக்கவில்லை. நானும் ரஹானேவும் ஓரளவிற்கு நகர்த்திக் கொண்டு சென்றோம். அதுபோல் அதற்கு பின்னர் எங்களைப் போல் ஆட யாரும் இல்லை என்பதால் இலக்கு மிகவும் கடினமாகவும் மாறிவிட்டது .எங்கள் மேல் பிரஷர் இருந்துகொண்டே இருந்தது, ஒவ்வொரு பந்துக்கும் பிரஷர் இருந்தது.

இங்கிலாந்து வீரர்கள் 11 பேரும் எப்படியாவது டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்று ஆடுகளத்தில், அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் ஆடினர், ஆனால் நம் அணியில் நாங்கள் இருவரும் மட்டுமே அப்ப்டி ஆடினோம் என்று நினைக்கிறேன். நாங்கள் இருவரும் அவர்களைப் போலவே இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்றும் அதற்கு பின்னர் இந்திய அணியில் பெரிதாக யாரும் இல்லை என்று கூறினார் விராட் கோலி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See