Connect with us

Cricket

இது தாண்டா டெஸ்ட் கிரிக்கெட்!! தோல்வியின் விளிம்பில் இருந்து போராடி டிரா செய்த ஆஸி கங்காருக்கள்!

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது.

280 முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 50 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இருவரும் நிலைத்து நிற்க ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி 15 ஓவர் இருக்கும்வரை இந்த ஜோடி நிலைத்து நின்றது. 126-வது ஓவரை யாசிர் ஷா வீசினார். இந்த ஓவரில் உஸ்மான் கவாஜா 141 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். கவாஜா 302 பந்துகள் சந்தித்தார்.

முதல் ஐந்து பந்துகளை டிம் பெய்ன் சிறப்பாக எதிர்கொண்டார். கடைசி ஒரு பந்தில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியாது என்பதால் அத்துடன் போட்டி முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது.டிம் பெய்ன் 194 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தும், நாதன் லயன் 34 பந்தில் 5 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் டிராவிற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See