Connect with us

Cricket

இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை: 18 வயது பிரித்திவ் ஷா

இங்கிலாந்துக்கு எதிராக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், ப்ரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி இடம் பிடித்துள்ளனர்.  இதில், முரளி விஜய் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில், இளம் வீரர்களான ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் இடம் பிடித்த பிரித்திவ் ஷா வெறும் 18 வயதான வீரர் ஆவார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது……

நான் இந்த அழைப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு சீக்கிரம் இந்திய அணிக்காக ஆட அழைக்கப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் 3 டெஸ்ட் போட்டிகளையும் நன்றாக உற்று கவனித்து வருகிறேன். ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்கு பயன்படுத்துவேன் என நம்புகிறேன். ஆனால் இந்த அழைப்பு எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையும் நல்ல உணர்வையும் கொடுத்துள்ளது என்று கூறினார் பிரித்திவ் ஷா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See