Connect with us

Asian Games

இந்தியாவிற்காக தங்கம் வென்ற 16 வயது சிங்கம்: துப்பாக்கி சுடுதலில் அசத்தல்

10மீ ஏர் ரைபில் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் 16 வயது இந்திய வீரர் சவுரப் சவுத்திரி.

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது தற்போது வரை இந்திய அணி 7 பதக்கங்கள் வென்று உள்ளது.

இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 16 வயது இந்திய வீரர் சவுரபி சவுத்திரி தங்கம் வென்று அசத்தி உள்ளார். அவர் கடைசி ரவுண்டில் சரியாக மையத்தை நோக்கி சுட்டு 10 புள்ளிகள் வென்றார். இதன் மூலம் 240.7 புள்ளிகள் பெற்று ஜப்பான் வீரரரை தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார்.

இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்று அசத்தி உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க பட்டியல் 7 ஆக உயர்ந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See