Connect with us

Cricket

இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட் போட்டியின் வித்யாசமான புள்ளிவிவரங்களின் பட்டியல்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி எப்படியாவது வென்று தொடரை சரிசெய்யும் என்று எதிர்பார்த்த ரசிகர்களை நான்காவது நாளிலேயே தோல்வியடைந்து ஏமாற்றத்தை கொடுத்துள்ளது இந்திய அணி. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வழக்கம் போல முந்தைய டெஸ்ட் போட்டிகளில் நடைபெற்ற தோல்விகளை போலவே பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வி நேரிட்டது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். தற்போது இந்த போட்டியில் நடந்த வித்தியாசமான சில புள்ளிவிவரங்களை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம்.

1003 – 1003- இந்த டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியின் 1003 டெஸ்ட் போட்டியாகும் தற்போது வரை இந்த அணி மட்டுமே ஆயிரம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 360 வெற்றிகளையும் 298 தோல்விகளையும் 345 போட்டிகளை ட்ராவும் செய்துள்ளது….

526 – இந்திய அணிக்கு இது 526 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதில் 146 வெற்றிகளையும் 163 தோல்விகளையும் 216 டிராவையும் ஒரு போட்டி டையிலும் முடித்துள்ளது இந்தியா…

974 – இந்தப் போட்டியில் மொத்தம் 974 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது..

96 – இந்த போட்டியில் மொத்தம் 96 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சட்டீஸ்கர் புஜாரா 16 அடித்துள்ளார்…

5 – இந்த போட்டியில் மொத்தம் ஐந்து சிக்சர்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது…

1 – 22 பேட்ஸ்மேன்களில், இந்தப் போட்டியில் ஒரே ஒரு சதம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது…

4 – 4 அரைசதங்கள் இந்த போட்டிகள் அடிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி மற்றும் ரகானே ஆகியோர் ஒன்றும் ஜோஸ் பட்லர் மற்றும் சம் குர்ரன் ஆகியோர் தலா 1ம் அடித்துள்ளனர்…

15 – 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் 15 வது டெஸ்ட் சதத்தை எட்டியுள்ளார்…

100  – இந்த போட்டியில் எந்த ஒரு பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களுக்கு மேல் நிலைக்கவில்லை. விராட் கோலி மற்றும் அஜின்கியா ரகானே மட்டுமே 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளனர்…

40 – நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம்  40 விக்கெட்டுகள் விழுந்தன…

5 – 50 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மொயின் அலி இந்த போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகள் மூலம் 4 முறை ஐந்து விக்கெட்டுகள் எடுத்துள்ள பெருமையை பெற்றுள்ளார்…

29 – இந்த போட்டியில் வித்தியாசமாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 29 பந்துகளில் என்று டக் அவுட் ஆகி உள்ளார்…

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See