Connect with us

Cricket

இந்தியா – இங்கிலாந்து: 4ஆவது டெஸ்ட் போட்டி – கணிக்கப்பட்ட இந்திய அணி : யார் உள்ளே? யார் வெளியே?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை இந்திய நேரப்படி மாலை 3.30 சவுதாம்ப்டன் நகரில் துவங்குகிறது.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில், இரண்டு போட்டியை இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வென்று ஓரளவிற்கு சரிசமமாக காட்சியளிக்கிறது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி திருப்பிக் கொடுத்த அடி இங்கிலாந்திற்கு சற்று மோசமான அனுபவமாக இருக்கும். இந்நிலையில் நான்காவது டெஸ்ட்ட்டை கைப்பற்றி தொடரை சமன் செய்து முன்னேற இந்திய அணி முனைப்பில் உள்ளது. அதே நேரத்தில் இந்த போட்டியை எப்படியாவது வென்று தொடரை கைப்பற்றும் எண்ணத்தில் இங்கிலாந்து களமிறங்குகிறது.

இந்திய அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது பேட்டிங்கில் மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கேப்டன் கோலி கடந்த 38 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட ஒரே மாதிரியான அணியை களம் இறக்கவில்லை.

இதனால் இந்தப் போட்டியில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .மாற்றம் இல்லை எனில் இது விராட் கோலியின் இந்த முதல் முயற்சியாகும். மேலும் கடைசி டெஸ்ட் போட்டிகளுக்கு இரண்டு பேட்ஸ்மேன்கள் வரவழைக்கப்பட்டுள்ளார். ஒன்று, 18 வயதான பிரித்திவ் ஷா, மற்றொன்று 25 வயதான ஹனுமா விஹாரி இருவருமே பேட்ஸ்மேன்கள் ஆவார்.

தற்போது இந்தியாவின் கணிக்கப்பட்ட அணியை பார்ப்போம்:

துவக்க ஆட்டக்காரர்கள்

தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் இறங்க மிகப் பெரும் வாய்ப்பு உள்ளது .ஏனெனில் முரளி விஜய் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் அடித்தது 25 ரன்கள் மட்டுமே.

அதனால் மூன்றாவது போட்டியில் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி அழைக்கப்பட்டார். தவான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இந்தியாவிற்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளனர். கடந்த 10 வருடத்தில் இல்லாத துவக்க பார்ட்னர்ஷிப் ரன்னையும் இவர்கள் கொடுத்துள்ளர். இதனால் இந்த இருவருமே இந்தப் போட்டியிலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்

மிடில் ஆடர்

நெ.3ல் சட்டேஸ்வர் புஜாரா நெ.4ல் விராட் கோலியும் களம் காணுவார்கள். புஜாரா முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சொதப்பினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஓரளவிற்கு ரன் சேர்த்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார். அதனையும் தாண்டி அவரது சிறந்த ஆட்டம் என்னவென்றால் அதிகபட்ச பந்துகள் நிற்பது. களத்தில் அதிகபட்ச பந்துகள் நின்று எதிரணி வீரர்களை ஓய்வில்லாமல் உழைக்க வைக்கும் திறமை அவரிடம் உள்ளது.

கேப்டன் விராட் கோலி நெ.4ல் –  விராட் கோலியை பற்றி பெரிதாக சொல்ல தேவையில்லை. ஏனெனில் கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேனாகவும் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். இதுவரை 440 அடித்துள்ள அவர் இந்த போட்டியில் 200 ரன்கள் அடித்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திரும்பும் என நம்பலாம்.

அடுத்ததாக பார்த்தால் ரஹானே முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை என்றாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிக்காட்டினார் இதன் மூலம் அவரது பார்ம் உறுதியாகியுள்ளது.

 

விக்கெட் கீப்பர்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்ட 20 வயதான ரிசப் பன்ட் இடம்பெறுவார் என்று உறுதியாக நம்பலாம். ஏனெனில் தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து சசொதப்பி வுதி வந்ததால் மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட் இறக்கப்பட்டார். இவரது கீப்பிங் மிகவும் எளிதாகவும்பேட்டிங்க் அதிரடியாகவும் இருக்கிறது. இதனால் ரிஷப் பன்ட் நான்காவது போட்டியில் கீப்பராக களமிறக்கப்படுவார்.

ஆல்ரவுண்டர்

இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா செயல்படுவார். மூன்றாவது போட்டியில் இவரது பங்களிப்பு மிகப் பெரியதாக இருந்தது. சொல்லப்போனால் ஆட்டநாயகன் விருது கோலிக்கு பதிலாக இவருக்கு கொடுத்து இருந்தால் மிகவும் அற்புதமாக இருந்திருக்கும். ஏனெனில் முதல் இன்னிங்சில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்த ஆட்டத்தையும் இந்தியாவின் பக்கம் திருப்பியவர் இவர்தான்.

சுழற்பந்து வீச்சாளர்

சுழற்பந்து வீச்சாளராக இந்தியாவின் ஆப்-பின்னர் அஸ்வின் தான் செயல்படுவார். ஒரு பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல் அவரது பேட்டிங்கும் கவனிக்கத்தக்க.து மொத்தம் 4 சதங்கள் அடித்துள்ள இவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணிக்காக பங்களிப்பார்.

 

வேகப்பந்து வீச்சு கூட்டணி

இந்த கூட்டணியை இசாந்த் சர்மா தலைமை கொண்டு வழிநடத்துவார். இவரது உயரம் இந்திய அணிக்கு மிகவும் லாபகரமானதாக இருக்கிறது. மேலும் தற்போது இங்கிலாந்தில் இவரது சரியான, நுணுக்கமான பந்துவீச்சு பலரது கிரிக்கெட் விமர்சகர்களை இவர் பக்கம் ஈர்த்துள்ளது .

அடுத்ததாக பார்த்தால் முகமது சமி இவர் தனது துல்லியமான பந்து வீச்சினால் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் எளிதாக ரன் விட்டுக்கொடுக்காமல் நெருக்கடியை ஏற்படுத்துகிறார். இவர்து வேலை இது மட்டுமே. இதனால் இவர் இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவைப்படுவார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தான் அணிக்குள் வந்தார். ஆனால், முதன்முறையாக இங்கிலாந்தில் ஆடுகிறோம் என்ற பயமில்லாமல் அற்புதமாக பந்துவீசி எதிரியை நிலைகுலையச் செய்தார். இந்தபோட்டியில் இவரது பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்கும் இவரது பந்துவீச்சில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See