Connect with us

Cricket

இந்தியா மெதுவாக முன்னேற்றம்: 3வது நாள் உணவு இடைவேளை நிலைமை!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இரு அணிகளுமே சொற்ப ரன்களுக்கு ஆல் அவுட் ஆக தற்போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் முன்னிலையில் ஆடிக்கொண்டிருக்கிறது.

தற்போது உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை விட்டு இந்திய அணிக்கு சற்று ஆறுதல் கொடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுக்க சற்று தடுமாறி வருகின்றனர். ஏனெனில் மூன்றாவது நாளான இன்று ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானதாக சற்று மாறி உள்ளது. இதனால் பெரிதும் ஸ்விங் ஆகாமல் ஆடுகளத்திலிருந்து எந்த ஒரு உதவியும் பந்துவீச்சாளர்களுக்கு இல்லாமல் இருப்பது போல் உள்ளது.

இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிக எளிதாக ரன்களை சேர்த்து வருகின்றனர். உணவு இடைவேளைக்கு முன்னர் கடைசி பந்தில் முகமது சமி இங்கிலாந்து வீரர் ஜென்னிங்சின் விக்கெட்டை வீழ்த்தினார்.இதனால் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர்.

தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆடுகளத்தில் உள்ளார். உணவு இடைவேளை முடிந்து வரும்போது அடுத்த ஒரு மணிநேரம் விக்கெட் விழுந்தால் இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் பக்கம் மாறும், அல்லது விக்கெட் விழாமல் ரன் சேர்த்தால் இங்கிலாந்து அணி பக்கம் சென்று விடும்.

தற்போது இந்திய அணி எப்படியாவது இங்கிலாந்து அணியை 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த ஒரு மணி நேரம் என்ன நடக்கிறது என்று

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See