Connect with us

Cricket

இந்திய அணிக்கு டிராவிட்டை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க முடியாமல் போனதற்கு ‘இவர்’தான் காரணம்: கங்குலி திடுக்கிடும் தகவல்

இங்கிலாந்தில் இந்த முறை இந்திய அணி கண்டிப்பாக சாதிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் படுமோசமாக தோல்வியடைந்து தொடரை இங்கிலாந்திடம் தாரைவார்த்தது இந்தியா. இதற்கு காரணம் இந்தியாவின் பேட்டிங் சரியாக எடுபடாமல் போனது ஆகும்.

மேலும் வீரர்களின் பேட்டிங் நிலையை மேலும் கீழுமாக மாற்றி அவர்களது நம்பிக்கையை குறைக்கும் விதமாக இந்திய அணி நிர்வாகம் செயல்பட்டு வந்ததாகவும் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதனைத் தாண்டி புஜாரா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் நம்பிக்கையும் குறைந்து விட்டதாகவும் பேசி வருகின்றனர். இந்நிலையில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இதற்கு மிகப்பெரிய காரணம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல்புரசலாக பேசப்படுகிறது.

இந்த நேரம் பார்த்து பழைய உண்மையை ஒன்றை திடுக்கிடும் வகையில் வெளியிட்டுள்ளார் சவுரவ் கங்குலி. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழு இந்திய பயிற்சியாளர் தேர்வு செய்யும் தலைமை குழுவாக செயல்பட்டு வருகிறது. அனில் கும்ப்ளே நீக்கப்பட்ட பிறகு ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சமயத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து கங்குலி கூறியதாவது…

நாங்கள் மூவரும் ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தோம். மேலும், அதனுடன் சேர்த்து ராகுல் டிராவிட்டை வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்தோம். இதற்கு ராகுல் டிராவிட் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.

அதன் பின்னர்  பயிற்சியாளர் புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் பேசச் சென்ற ராகுல் டிராவிட் அவரிடம் பேசிவிட்டு வந்த பின்னர்  மனம் மாறி பேட்டிங் பயிற்சியாளர் பதவியை வேண்டாம் என்று எங்களிடம் கூறிவிட்டார். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவரிடம் பேசிய பிறகு ராகுல் டிராவிட் தற்போது இந்த அணியுடன் வேலை செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.

இவ்வாறு கங்குலி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவரது காலத்தில் வெளிநாடுகளில் இந்திய அணியின் தூணாக இருந்த ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தால் தற்போதைய இந்திய அணியின் இந்த தோல்வி தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது அப்போது முடியாமல் போனதற்கு காரணம் அது ரவி சாஸ்திரிதான் என்று தற்போது செய்திகள் வந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See