Connect with us

Cricket

இந்திய அணிக்கு பயிற்சியாளராகப் போகும் தமிழன்!!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் 1980களில் தனது 17 வயதில் இந்திய அணிக்காக சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார் 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமானவர்கள். ஆனால் அவர்களுக்கு இன்னும் சிறிது மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது என்று கூறினார். குல்தீப் யாதவ் இன்னும் சரியான கோணத்தில் வீசவேண்டும் அவரது உடம்பு மற்றும் கைகள் ஒருசேர வருவதில்லை பந்துவீசும் போது ஒரு வட்டப் பாதையில் செல்ல வேண்டும் அதை அவருக்கு நன்றாக இன்னும் அமையவில்லை என்று கூறினார் அவர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See