Connect with us

Cricket

இந்திய அணியின் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்பித்த கோஹ்லி; குவியும் வாழ்த்து !!

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சமர்பிப்பதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய படை, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி 317 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, இங்கிலாந்து அணியுடனான இந்த வெற்றியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்பித்த கோஹ்லிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See