Connect with us

Cricket

இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட முரளி விஜய் : கதவை தட்டினார் காற்று வந்தது – புதிய அணியில் இணைந்தார்

இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் ஆடிவந்த முரளி விஜய் தற்போது டெஸ்ட் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டியில் 6 ஆட்டங்களில் மொத்தம் 24 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் விஜய்.

இதனால் அடுத்த இரண்டு போட்டிகளுக்கு அதிரடியாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துவிடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் முரளி. அதனைத் தாண்டி இங்கிலாந்தி மண்ணில் சொதப்பியதால் அதே இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாட பல அணிகளுக்கு விண்ணப்பம் வைத்திருந்தார் முரளி விஜய்.

கதவை தட்டினால் காற்று வரும் என்பதைப் போல அவருக்கு இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய கவுண்டி அணியான எசெக்ஸ் கவுண்டி அவருக்கு வாய்ப்பை அளித்துள்ளது. இதனால் இந்த வருட கவுண்டி தொடரில் எசெக்ஸ் அணிக்காக ஆடுவது உறுதியாகியுள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது….

ஒரு மாதத்திற்கு முன்னர் நான் இங்கிலாந்தில் தான் இருந்தேன் இந்த நாட்டின் ரசிகர்கள் மிகவும் அற்புதமானவர்கள். எப்போதும் நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். எக்செக்ஸ் அணியில் இணைந்து அந்த ரசிகர்களை மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று கூறினார் முன்னால் இந்திய வீரர் விஜய்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See