Connect with us

Cricket

இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன்முரளி விஜய் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயம் தான் மீண்டும் இடம் பிடிப்பேன் என முரளி விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து  சென்றுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு துவக்கம் கொடுத்த முரளி விஜய் கடுமையாக சொதப்பியதால் அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார், அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் இந்திய அணிக்கு துவக்கம் கொடுத்து வருகிறார்.

இதனால் முரளி விதையின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தான் நிச்சயம் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் இதற்கு முன்பும் பலமுறை அணியிலிருந்து நீக்கப்பட்டு தான் மீண்டும் வந்துள்ளதாகவும் இதுவும் அதே போன்று தான் என்றும் விரைவில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் எனவும் முரளி விஜய் தெரிவித்துள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See