Connect with us

Cricket

இந்திய அணி அபாரம்: துவக்கமே பிரமாதம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது.

இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டி யாரும் எதிர்பாராத வகையில் சமனில் முடிவடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த இரண்டு போட்டியிலும் சதம் அடித்து மிரட்டினார். இந் நிலையில் 3வது ஒரு நாள் போட்டி புனேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தற்போது 60 ரன்களுக்கு 3 விக்கெட் என பிரமாத துவக்கம் கொடுத்துள்ளது இந்திய அணி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See