Connect with us

Cricket

இந்திய கேப்டன் விராட் கோலி சாதனை – பாக். கேப்டனின் சாதனை முறியடிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் 45 ரன்கள் எடுத்த இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் குவித்த ஆசிய கேப்டன்கள் வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பாஹ் உல் ஹக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 ஆசிய கேப்டன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

விராட் கோஹ்லி – 4233 ரன்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நிகழ்கால கிரிக்கெட் உலகின் கிங் மேக்கராகவும் திகழ்ந்து வரும் விராட் கோஹ்லி 42 போட்டிகளில் 4233 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

மிஸ்பாஹ் உல் ஹக் – 4214 ரன்கள்;

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பாஹ் உல் ஹக் மொத்தம் 56 போட்டிகளில் 4214 குவித்ததிருப்பதன் இந்த பட்டியலில் 4214 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஜெயவர்த்தனே – 3655 ரன்கள்;

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான ஜெயவர்த்தனே 38 போட்டிகளில் 3655 ரன்கள் குவித்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தோனி – 3454 ரன்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி மொத்தம் 60 போட்டிகளில் 3454 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

சுனில் கவாஸ்கர் – 3449 ரன்கள்

கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனாக அறியப்பட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் 49 போட்டிகளில் 3449 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See