Connect with us

Badminton

இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னாவுக்கு டும் டும்: சக வீரரை மணக்கிறார்

இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், 28. ‘நம்பர்–10’ இடத்தில் உள்ள இவர், இவரும், ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட சக பாட்மின்டன் வீரருமான காஷ்யப்பும்,32, சில ஆண்டாக பழகி வந்தனர்.

கடந்த 2014ல் கோபிசந்த் பயிற்சி அகாடமியிலிருந்து வெளியேறிய செய்னா, புதிய பயிற்சியாளராக விமல் குமாரை தேர்வு செய்தார். ஐதராபாத்திலிருந்தும் பெங்களூருவுக்கு மாறினார். அப்போது, பெங்களூருவுக்கு சென்று செய்னாவை பார்ப்பதை காஷ்யப் வழக்கமாக கொண்டிருந்தார். பின், 2017ல் ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமிக்கு திரும்பினார் செய்னா.

காஷ்யப் மீதான அன்பின் காரணமாகவே செய்னா மீண்டும் ஐதராபாத் வந்ததாக கூறப்பட்டது. தற்போது, இந்த யூகத்திற்கு விடை கிடைத்தது. இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 16ல் ஐதராபாத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமான 100 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 21ல் நடக்கும் எனத்தெரிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See