Connect with us

Cricket

இந்திய வீரர்களுக்கு தொல்லை கொடுப்பதில் சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் !!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகமில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அணிக்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஜேம்ஸ் ஆண்டர்சன் பிடித்துள்ளார். முரளிதரன், இந்திய அணிக்கு எதிராக 105 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள வீரர்கள்;

  1. முத்தையா முரளிதரன்(இலங்கை) – 105 விக்கெட்டுகள்
  2. ஜேம்ஸ் ஆண்டர்சன்*(இங்கிலாந்து) – 100 விக்கெட்டுகள்
  3. இம்ரான் கான்(பாகிஸ்தான்) – 94 விக்கெட்டுகள்
  4. மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்) – 76 விக்கெட்டுகள்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See