Connect with us

Cricket

இந்த இருவர்தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள்: ஜாம்பவான் பிரையன் லாரா புகழாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாரா தற்போது ஐசிசி உலக கோப்பை தொடருக்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நேரத்தின் போது அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் அவர் தற்போதைய கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார் எனக் கூறியுள்ளார்.

அது வேறு யாருமில்லை கிரிக்கெட் உலகில் பேட்டிங்கிற்கு பெயர்போன இந்தியாவின் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகிய இருவரும் தான். இந்த இருவரும்தான் தற்போதைய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று கூறியுள்ளார் பிரையன் லாரா.

மேலும் தன்னுடைய கிரிக்கெட் காலத்தில் முத்தையா முரளிதரன் தன்னை மிகவும் பந்துவீச்சில் குழப்பியதாகவும் கூறியுள்ளார். அதனுடன் சேர்த்து முரளிதரன் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் தான் தன்னுடைய காலத்தில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See