Connect with us

Cricket

இந்த ஐபிஎல் அணியில் இணையப் போகிறார் இங்கிலாந்து இளம் ஆல் ரவுண்டர் சாம் குர்ரான்?

அடுத்தவருட ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் குர்ரானை வளைத்துப் போட முயற்சி செய்து வருகிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிக்கையான தி கார்டியன் தகவலின் படி 20 வயதான குர்ரான் அடுத்த்வருட ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடுவார் என்று தெரிவித்துள்ளது. மேலும் பெங்களூர் அணி அவரை வளைத்துப் போடுவதில் அதிதீவிரமாக உள்ளதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அடுத்த வருட ஐபிஎல் தொடரில் அவருக்கு கடும் போட்டிகள் இருக்கும் என்று தெரிகிறது. ஏலத்திற்கு அவர் செல்லும் போது கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் அவர் விலை போவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய மூன்று அணிகளும் போட்டி போடும் எனவும் அந்தப் பத்திரிகை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவரை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டி உள்ளதாக தெரிகிறது. சொல்லப்போனால் சாம் குர்ரானின் அண்ணன் டான் குர்ரான் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஆடிவருகிறார்.

சென்ற வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய அவர் 5 போட்டிகளில் 6 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த வருடத்தில் சாம் குர்ரானுக்கு மிக அதிக போட்டிகள் இருக்கும். ஏனெனில் இவர் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்தி வருகிறா.

ர் தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் 5 ஆட்டத்தில் 250 ரன்கள் குவித்து மட்டுமல்லாமல் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இப்படியே இவரது பார்ம் தொடருமானால் அடுத்த வருட ஐபிஎல் தொடரில் மிக அதிக விலைக்கு போகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See