Connect with us

Cricket

இனி அவர நம்பி பிரயோஜனம் இல்ல… தோனி குறித்து சஞ்சை மாஜரேக்கர் கடுப்பு!!

தோனி விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது, களத்திலும் பயிற்சியின் போதும் அவர் இரண்டாவது கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்பொழுது விளையாடி வருகிறார். இந்தப் போட்டிகளின் போது இக்கட்டான நேரங்களில் விராட் கோலிக்கு டோனி ஆலோசனை கூறுவார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்கும்.

டோனியின் பேட்டிங் சொதப்பல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்ஜய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார்,

” ஒரு கீப்பராக டோனி தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு உலக்க கோப்பைக்கு இந்திய அணி கோலி தலைமையில் செல்ல இருக்கிறது. கோலிக்கு பக்கபலமாக அனுபவம் வாய்ந்த டோனி உடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், டோனியின் பேட்டிங் தொடர்ந்து கவலையளிக்கிறது. இது அணிக்கு பின்னடைவாக அமைந்திடும். டோனிக்கு பதிலாக வேற ஒரு வீரர் சாய்ஸில் இருந்தால் அதனை பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும்” என சஞ்ஜய் மஞ்சரேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See