Connect with us

Cricket

இன்றைய காலத்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்: கெவின் பீட்டர்சன் புகழாரம்

சர்வதேச அரங்கில் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டு விளையாட ஆரம்பித்து 141 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சில பேட்ஸ்மேன்கள் மற்றும் ஒரு சில வீரர்கள் அற்புதமாக ஆடி மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். இப்படியாக எண்ணற்ற வீரர்கள் வந்தாலும் சொற்ப வீரர்களே அன்று முதல் இன்று வரை ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய கிரிக்கெட்டை பொறுத்த வரை மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகள் ஆடப்படுகிறது. இந்த மூன்றிலுமே உலகில் ஒரு சில வீரர்கள் மட்டுமே நன்றாக ஜொலித்து வருகின்றனர். குறிப்பாக பேட்ஸ்மேன்களில் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய குறிப்பிடத்தக்க ஒரு சில வீரர்கள் மட்டுமே இந்த காலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

ஆனால் இந்த நான்கு வீரர்களில் விராட் கோலி தான் சிறந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி அற்புதமாக ஆடியுள்ளார். கிட்டத்தட்ட 600 ரன்களை குவித்துள்ளார் அவர்.

தற்போது 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் கெவின் பீட்டர்சன் விராட் கோலி பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

அதாவது..

நான் உங்கள் ஆட்டத்தை பார்க்கத்தான் வந்துகொண்டிருக்கிறேன். ஒரு அற்புதமான ஆட்டத்தை ஆடி எனக்கு விருந்தளிப்பார்கள் என்று நம்புகிறேன். நன்றி சகோதரா!! இந்த கால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் ஆடுவதை பார்ப்பதை விட வேறு சிறந்த வேலை எதுவாக இருக்க முடியும். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கொலை பற்றி ட்வீட் செய்துள்ளார் பீட்டர்சன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See