Connect with us

Cricket

இம்ரான் கான் ஆட்டம் ஆரம்பம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த நஜீம்ஸ் சேத்தி திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வருபவர் நஜீம் சேத்தி.

தற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் பதவியேற்றவுடன் தனது ராஜினாமா கடிதத்தை அவருக்கு அனுப்பி உள்ளார்.

மேலும் இந்த ராஜினாமாவின் பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானிற்கு பெரும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனெனில் நஜீம் சேத்தி, இம்ரான் கானால் நியமிக்கப்பட்டவர் இல்லை. மேலும் தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பால் நியமிக்கப்பட்டுள்ளார் .

இதனால் இம்ரான்கான் தலையீடு காரணமாக இவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த ராஜினாமா கடிதத்தில் நஜீம் சேத்தி குறிப்பிட்டுள்ளதாவது….

நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடந்த 2014ம் ஆண்டில் இருந்து சேவை செய்து வருகிறேன். 2017 முதல் 2020 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்க எனக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்னை இந்த பதவிக்கு நியமித்ததார்.

தற்போது வரை இந்த பதவியில் நான் நன்றாக செயல்பட்டுள்ளேன் என நம்புகிறேன்.

தற்போதைய புதிய பிரதமர் இம்ரான்கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார் .

அவர் கிரிக்கெட் குறித்து நிறைய எதிர்காலத் திட்டங்களை வைத்திருப்பார் இதனால் அவரது ஆட்சிக் காலத்தில் நான் அவருக்கு என் ராஜினாமா கடிதத்தை அளிக்கிறேன். மேலும் நான் இந்த பணியில் தொடர போவதில்லை என்று உறுதி அளிக்கிறேன். என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார் நஜீம் சேத்தி.

நஜீம் சேத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கும் போது பலமுறை மறைமுகமாக இம்ரான் கானுக்கு எதிராக பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See