Connect with us

Badminton

இரண்டாம் இடம் பெறுவது அவ்வளவு எளிதல்ல, ஆனால் தொடர்ந்து இரண்டாம் மட்டுமே என்றால்: பி வி சிந்து உருக்கம்!!

பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்ற வாரம் முடிவடைந்தது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி வி சிந்து இறுதி போட்டி வரை சென்று ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் வசம் இரண்டாவது முறையாக தோற்றார். இதற்கு முன்பாக ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் பி வி சிந்து இவரிடம் தான் தோற்றார்.

அதுமட்டுமல்லாமல், ஹாங்காங் ஓபன் (2017,2018), சூப்பர் சீரீஸ் (2017), இந்தியா ஓபன் (2018), தாய்லாந்து ஓபன் (2018) ஆகிய தொடர்களிலும் பி வி சிந்து இறுதி போட்டி வரை சென்று தோல்வியுற்றுள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிந்து, வெள்ளி பதக்கத்தை நான் ஒன்றும் அவ்வளவு எளிதாக கருதவில்லை, ஆனால், தொடர்ந்து இறுதிப்போட்டி வரை சென்று தோற்பது எனக்கும் என் ரசிகர்களுக்கும் இது ஆரோக்கியமாக அமையாது. முன்பு இருந்ததை விட தற்போது இன்னும் கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் நிச்சயம் முதலிடம் பிடிப்பேன் என உறுதிபட கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See