Connect with us

Cricket

இரண்டாவது டெஸ்ட் போட்டி; பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து !!

இரண்டாவது டெஸ்ட் போட்டி; பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்க இருந்த நிலையில் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இன்று போட்டி துவங்கியது.

இதில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புஜாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் உமேஷ் யாதவிற்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி;

முரளி விஜய், கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், குல்தீப்  யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா

இங்கிலாந்து அணி;

அலெய்ஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், ஒலி போப், பாரிஸ்டவ், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான், அடில் ரசீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See