Connect with us

Cricket

இரண்டு முறை தட்டிவிட்டு மூன்றாவது முறை லாவகமாக கேட்ச் பிடித்து அசத்திய கே.எல் ராகுல் – வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முக்கியமான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால் ,தொடரை கைப்பற்றும் இந்திய அணி வென்றால் 2-2 என்ற நிலைக்குச் சென்று அடுத்த போட்டியில் மிகவும் மூர்க்கத்தனமான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

இந்நிலையில் நேற்று போராடி பெற்ற புஜாராவின் சதத்தால் இந்திய அணி சொற்ப ரன்கள் முன்னிலையில் ஆட்டத்தை இங்கிலாந்திடம் கைமாற்றியது. நேற்று பொறுமையாக ஆடி விக்கெட் ஏது விடவில்லை இங்கிலாந்து.

இன்று காலை வந்தவுடன் அங்கும் இங்குமாக ஒருசில ரன்கள் அடிக்க வழக்கம்போல் அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் பும்ராவிடம் தனது விக்கெட்டை இழந்தார்.

ஆனால் இந்த விக்கெட் இந்திய அணிக்கு மிகப்பெரிய விக்கெட்டாக அமைந்தது. மேலும் போராடி எடுக்கவேண்டியிருந்தது. 12வது ஓவரின் முதல் பந்தை வீசிய பும்ராவிட பந்தை முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த கேஎல்.ராகுலிடன் எட்ஜ் செய்தார் குக்.

பந்து ராகுலின் கையில் நிற்காததால் ஒருமுறை தட்டிவிட்டு இரண்டாவது முறை எடுக்கப் போனார் ஆனால் இரண்டாவது முறையும் அவர் கையில் நிற்கவில்லை. அந்த முறையும் எப்படியோ தனது சாதுரியத்தால் தட்டிவிட்டு மூன்றாவது முறை அந்த கேட்சை லாவகமாக பிடித்து அசத்தினார் கே.எல். இதற்கிடையில் கீப்பர் பன்ட்டும் கேட்ச் பிடிக்க வந்ததால் கேஎல் ராகுல் சற்று சிரமப்பட்டார் ஆனால் அந்தக் காட்சி மிகவும் அற்புதமாக அமைந்தது.

அந்த வீடியோ கீழே:

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See