Connect with us

Kabaddi

இரானுக்கு தங்கம் வாங்கிக் கொடுத்த இந்திய வீராங்கனை – இந்தியா ஒதுக்கியது ஏன்?

இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எப்போதும் எந்த வகையான போட்டி வந்தாலும் சரி உலகக்கோப்பை ஆனாலும் சரி அதில் கபடி போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்று கொண்டே தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இருந்து ஒரு தங்கம் கூட வரவில்லை. ஏனெனில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர்  ஈரானிடம் தங்கப்பதக்கத்தை இழந்தது.

ஆடவர் அணி ஈரானிடம் தோற்ற வெண்கலப்பதக்கத்தையும், மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இதில் மகளிர் அணி ஈரான் மகளிர் அணியில் பெரிய வித்யாசம். இது ஒரு வித்தியாசமான நிகழ்வு, சொல்லப்போனால் இந்தியர்கள் கடுப்பாகும் நிகழ்வு.

ஏனெனில், ஈரான் மகளிர் அணியின் பயிற்சியாளர் ஒரு இந்திய வீராங்கனை ஆவார். அவரை இந்திய அணி ஏன் ஒதுக்கியது என இன்னும் தெரியவில்லை. அவரது பெயர் சைலஜா ஜெயின் இவர் மஹாராஸ்டிர மாநிலம் நாசிக் நகரை சேர்ந்தவர்.

62 வய்தான இவர் தற்போது வரை ஆயிரக்கணக்கான இளம் வீரர்களை உருவாக்கி உள்ளார். இவருக்கு ஏன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை கொடுக்கவில்லை என்பது இன்னும் தெரியாத புதிராகவே உள்ளது. ஆனால் அவரை சரியாக அறிந்து கொண்ட ஈரான் அணி அவரை எடுத்து தன் பக்கம் வைத்து அவ்ரது சொந்த வீராங்கனைகளையும் சொந்த நாட்டு அணியை வென்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See