Connect with us

Other Games

இளையோர் ஒலிம்பிக் போட்டி: தங்கம் வென்ற இந்தியாவின் சிங்க மகள் மனு பாக்கர்!

அரியானாவை சேர்ந்த 16 வயதான மானு பாகெர் உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி இருந்தார். சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அவர் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் அவர் பதக்கமின்றி ஏமாற்றம் அளித்தார். அதற்கு இந்த போட்டியில் மானு பாகெர் பரிகாரம் தேடிக் கொண்டார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மானு பாகெர் கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆசிய போட்டி ஏமாற்றத்திற்கு பிறகு கிடைத்த இந்த வெற்றி எனது மனஉறுதிக்கு வலுசேர்க்கும். ஒவ்வொரு முறையும் முழுதிறமையை வெளிப்படுத்தவே முயற்சிக்கிறேன். சில நேரம் வெற்றிகரமாக அமையாமல் போகலாம். ஆனால் விடா முயற்சியை சிறந்த முறையில் தொடர்வதும், அதிக புள்ளிகள் குவிப்பதும் திருப்தி அளிக்கிறது’ என்றார்.

ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 9-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் தோற்கடித்தது. பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See