Connect with us

Cricket

இவர் அடுத்த வருட ஐபிஎல் தொடரில் பல கோடிகளுக்கு ஏலம் போவார்: ஹர்பஜன் சிங் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா?

ஒருகாலைத் தூக்கி மிட்விக்கெட்டில் ஆடும் ‘நடராஜா’ ஷாட்டில் முன்னாள் மே.இ.தீவுகள் பேட்டிங் மேதை பிரையன் லாராவை ஒத்திருக்கிறார் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி சதம் கண்ட ஹெட்மையர்.

அதே போல் பிரவுன் பனாமா தொப்பியை அணிந்து கொண்டு மேலேறி வந்து ஸ்பின்னர்களை அடிக்கும் போது கீத் ஆர்த்தர்டன் என்ற இடது கை மே.இ.வீரரை நினைவூட்டுகிறார் ஹெட்மையர்.

டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ்வை புரிந்து கொள்ள முடியாமல் ஆட்டமிழந்தாலும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியப் பந்து வீச்சை புரட்டி எடுத்தார், மொகமது ஷமியை லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்து அதிரடி சதம் கண்டார்.

இவரது ஆட்டத்தைப் பார்த்த ஹர்பஜன் சிங், ‘நிச்சயம் 2019 ஐபிஎல் தொடரில் அடுத்த மில்லியன் டாலர் பேபி’ என்று ஹெட்மையரைப் புகழ்ந்தார்.

இது குறித்து ஹெட்மையர் தெரிவிக்கும்போது, “இந்திய அணியின் கிரேட்டஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் என்னை உயர்வாக மதிப்பிட்டது உற்சாகமளிக்கிறது. ஐபிஎல் தொடரில் ஆட வேண்டுமென்பது என் கனவு, ஆனால் இப்போதைக்கு மே.இ.தீவுகள் மீதுதான் கவனம். இதன் மூலம் ஐபிஎல் பரிசு கிடைத்தால் கிடைக்கட்டும்.

நான் லாரா விசிறி, நான் இளம் வயதில் லாராவின் ஆட்டத்தைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் அவரைப்போல்தான் பேட் செய்கிறேன் என்று பலரும் என்னிடம் கூறுவதுண்டு. ஆனால் எனக்கு அது இயல்பாக வருகிறது, நான் இயல்பான ஒரு ஸ்ட்ரோக் மேக்கர். அது நன்றாக வந்தால் நல்லுணர்வு ஏற்படுகிறது” என்று ஹெட்மையர் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See