Connect with us

Cricket

‘இவர் வீசுன ஒவர்ல எங்கனால ரன்னே அடிக்க முடியல’: கதறும் அலிஸ்டர் குக்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் முடிவில் இங்கிலாந்து அணி மிகப்பெரும் முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் இந்த சோகமான நிலைக்கு காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள்தான். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் எப்போதும் போல் அசத்தலாக பந்து வீசினர். கடைசி 3 விக்கெட்களை எடுக்க மட்டுமே சற்று திணறினர்.

இதுகுறித்து தற்போது ஓய்வினை அறிவித்துள்ள அலாஸ்டர் குக் கூறியதாவது….

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதும் போல அற்புதமாக வீசினர். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரியாக ஆட வேண்டி இருந்தது. நாங்கள் நாள் முழுவதும் உழைத்து மட்டுமே ரன் எடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் பெரிதாக எந்தத் தவறும் செய்யவில்லை.

குறிப்பாக முகமது சமி இந்திய பந்துவீச்சாளர்களில் சிறப்பாக வீசினார். அவரது பந்துவீச்சு கணிக்க முடியாதபடியும் எங்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதாகவும் இருந்தது. அவர் வீசிய் பந்துகளை விளையாட நாங்கள் நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களை அவர்தான் சிறப்பாக வீசினார் ஆனால் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் போனது வருத்தமாக உள்ளது என்று கூறினார் குக்.

ஆம் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் 30 ஓவர்கள் வீசி 72 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால் அவர் வீசிய 30 ஓவர்கள் அற்புதமாக இருந்தது. சோகம் என்னவென்றால் அவருக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See