Connect with us

Football

உலகக்கோப்பைல விட்டுட்டோம்.. இப்போ வச்சு செஞ்சோம்ல… சொல்லி வச்சு செஞ்ச ஸ்பெயின் அணி!! வாங்கிகட்டிக்கிட்டு வீட்டுக்கு போன குரோசியா!!

ஐரோப்பிய சர்வதேச கால்பந்து அணிகள் இடையே நடைபெறும் UEFA நேஷனல் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் குரோசியா அணிகள் மோதின.

முதல் சில நிமிடங்கள் ஆட்டம் குரோசியா அணியின் பக்கம் இருந்தாலும், ஸ்பெயின் அணியின் நடுகள வீரர் சவுல் அடித்த கோல் க்கு பிறகு ஆட்டம் அப்படியே ஸ்பெயின் பக்கம் திரும்பியது.

மேலும் 33வது நிமிடத்தில் அசென்சியோ தொலைவில் இருந்து ஒரு கோல் போட்டு அசத்தினார். அடுத்த 2வது நிமிடத்தில் அசென்சியோ ஒரு கோல் அடிக்க முயர்சிக்கும் போது கோல் கம்பியில் பட்டு மீண்டும் உள்ளே வர.. அது கோல் கீப்பர் மேல் பட்டு மீண்டும் உள்ளே சென்று சொந்த கோல் ஆனது.

முதல் பாதியை 3-0 என முடித்தது ஸ்பெயின் அணி. எதுவும் செய்வதறியாது தவித்தது குரோசியா அணி.

இரண்டாவது பாதியிலும் ஸ்பெயின் தாக்குதல் தொடர்ந்தது. ரொட்ரிகோ 49வது நிமிடத்திலும், ராமோஸ் மற்றும் இஸ்கோ முறையே 59 மற்றும் 70வது நிமிடங்களில் கோல் அடிக்க 6-0 என பலமான முன்னிலை பெற்றது ஸ்பெயின் அணி.

இறுதியில் 0-6 வரலாற்று மோசமான தோல்வியை சந்தித்தது குரோசியா அணி.

உலகக்கோப்பை இறுதிவரை சென்ற அணியை இப்படி ஒரு தோல்விக்கு தள்ளிய ஸ்பெயின் அணிக்கு இந்த வெற்றி மேலும் பலம் சேர்த்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See