Connect with us

Cricket

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை – பரம எதிரியுடன் பாகிஸ்தானுடன் ஒரு போட்டி

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கமிட்டி ஐ.சி.சி. போர்டுக்கு அனுப்பியுள்ளது. ஐ.சி.சி. போர்டு குழு ஒப்புதல் அளித்ததும் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய துணை கண்டத்து ரசிகர்கள் போட்டியை இரவு 11 மணிக்குள் டி.வி.யில் ஆட்டங்களை பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்-இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள் விவரம் வருமாறு:-

தேதி                      எதிரணி                      மைதானம்

ஜூன்.5         தென்ஆப்பிரிக்கா          சவுதம்டன்

ஜூன்.9           ஆஸ்திரேலியா              தி ஓவல்

ஜூன்.13           நியூசிலாந்து               நாட்டிங்காம்

ஜூன்.16            பாகிஸ்தான்             மான்செஸ்டர்

ஜூன்.22         ஆப்கானிஸ்தான்        சவுதம்டன்

ஜூன்.27         வெஸ்ட் இண்டீஸ்       மான்செஸ்டர்

ஜூன்.30             இங்கிலாந்து             பர்மிங்காம்

ஜூலை.2        வங்காளதேசம்           பர்மிங்காம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See