Connect with us

Other Games

உலக ஜூனியர் ஸ்குவாஷ் – இந்திய அணிக்கு முதல் வெற்றி

13 ஆவது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி பதிமூன்றாவது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி தொடர் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்து வருகிறது.

இதில் தனிநபர் போட்டி நிறைவடைந்த நிலையில் அணிகளுக்கான பந்தயம் நேற்று தொடங்கியது. ஆண்கள் பிரிவில் 24 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ‘இ’ பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சவுதிஅரேபியாவை தோற்கடித்தது.

இந்திய அணியில் ராகுல் பாய்தா, உத்கார்ஷ் பஹெதி, வீர் சோட்ரானி ஆகியோர் வெற்றியை தேடித்தந்தனர். தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் பதம் பார்த்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது. இதே போல் பலம் வாய்ந்த அணியான எகிப்து அணி சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவை தலா 3-0 என்ற கணக்கில் பந்தாடி அடுத்த சுற்றை எட்டியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See