Connect with us

Badminton

உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்: வெள்ளி பதக்கம் வென்ற சிந்து

உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பி.வி.சிந்து தோல்வியை தழுவினார். இதன்மூலம் வெள்ளி பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர் கொண்டார். இந்த போட்டியில் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் கரோலினா மரினிடம் சிந்து தோல்வியை தழுவினார். இதன் மூலம் சிந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

முதல் ஆட்டத்தில் சிந்து தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், பின்பு அந்த ஆட்டத்தின் முடிவில் கரோலினாவின் அபாரமான சர்வீஸ்களால் 21-19 என்ற செட் கணக்கில் வென்றார். பின்பு இரண்டாவது ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே முன்னிலை வகித்த கரோலினா 21-10 என்ற செட் கணக்கில் அந்த ஆட்டத்தையும் கைப்பற்றியதால் போட்டியை வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் தொடர்ந்து 3- முறையாக உலக சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி கரோலினா உலக சாதனைப் படைத்துள்ளார். மேலும் சிந்துவுக்கு இது 2-வது வெள்ளி பதக்கமாகும். 2017-ஆம் ஆண்டு இதே போல், கரோலினாவுக்கு எதிரான இறுதி போட்டியில் சிந்து தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See