Connect with us

Cricket

‘எங்களையே எதுத்து பேசுரிங்களா…’ முரளி விஜய் மற்றும் கருன் நாயரை தாக்க தயாராகும் பிசிசிஐ

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழகத்தை சேர்ந்த தொடக்க வீரர் முரளி விஜய், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர் ஆகியோர் நீக்கப்பட்டனர். இங்கிலாந்தில் மோசமான ஆட்டம் காரணமாக முரளி விஜய் கழற்றி விடப்பட்டார். இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்காமலேயே கருண் நாயர் நீக்கப்பட்டார்.

அணியில் இருந்து நீக்கப்பட்ட இருவரும் தேர்வு குழுவினர் மீது விமர்சனம் செய்து இருந்தனர். நீக்கம் தொடர்பாக தேர்வு குழுவினர் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில தேர்வு குழுவை விமர்சனம் செய்ததால் முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விஜய் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு அணியிலிருந்தே நீக்கப்பட்டார், ஆனால் அவர் எசெக்ஸ் அணிக்கு 3 போட்டிகளில் ஆடினார். ஆகவே கருண் நாயர் சிறியவர் அவரை மன்னிக்கலாம் என்று ஒருதரப்பினர் கூற, விஜய் கூறிய கருத்துகள் பிசிசிஐ-யை காயப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See