Connect with us

Cricket

எங்கள் வெற்றிக்கு இந்த இரண்டு வீரர்கள் தான் காரணம்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பெருமிதம்

வழக்கம் போல அவர்கள் நாட்டில் நடக்கும் தொடரில் அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று நிரூபித்துள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்தில் டெஸ்ட் விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை, அவர்களை எதிர்த்து போராடி மட்டுமே வெற்றி பெற முடியும் ஒரு போதும் அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், என்று நிரூபித்துள்ளது இங்கிலாந்து அணி,

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் சற்று பெருமையாக பேசி உள்ளார்,மேலும் வெற்றிக்கு காரணம் இந்த இரண்டு வீரர்கள் தான் என பெயர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது….

சாம் குர்ரானைப் போன்று ஒரு மிக இளம் வயது வீரர் ஒரு தொடர் முழுவதும் நன்றாக ஆடுவது பார்க்க அற்புதமாக இருக்கிறது. அவரது ஆட்டத்திறன் இந்த தொடர் முழுவதும் எங்களை ஈர்ர்த்துக்கொண்டே வந்தது. இங்கிலாந்து அணியில் புதிய இளம் திறமைகள் கண்டறியப்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர்கள் மீண்டும் தங்களின் திறமையை நிருபித்துள்ளனர். சாம் குர்ரன் இங்கிலாந்து அணிக்கு ஒரு முக்கிய வீரராக மாறியுள்ளார். மொயின் அலி ஐபிஎல் தொடருக்கு சென்று வந்த பின் சற்று வித்யாசமாக மாறிய வீரராக உள்ளார். அவர் ஆட்டத்திறனும் மாறியுள்ளது.

இந்த போட்டியில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகள்தான், இங்கிலாந்து அணிக்காக அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் மிகவும் பெரியது, மதிப்பு மிக்கது. இந்த போட்டியின் வெற்றிக்கு குர்ரான் மற்றும் மொயின் அலி ஆகிய இரண்டு வீரர்கள் மிகப்பெரும் காரணமாகவும் அமைந்துள்ளனர். என்று இந்த இரண்டு வீரர்களை புகழ்ந்து பேசினார் இங்கிலாந்து கேப்டன் ரூட்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See