Connect with us

Cricket

எங்கே ‘அவர்’? ஆசிய கோப்பைகான இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பளிக்காததால் கடுப்பான ஹர்பஜன் சிங் ட்விட்டரில் சாடல்!!

தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நாளை துவங்கி 11ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு இங்கிலாந்திலிருந்து அப்படியே இந்திய அணி துபாய் சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி சென்ற வாரம் அறிவிக்கப் பட்டது .

இதில் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் சிகர் தவான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த கேதர் ஜாதவ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதேபோல் அக்சர் பட்டேல் மற்றும் புதுமுக வீரர் கலீல் அகமது என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அணி தேர்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் ஹர்பஜன் சிங். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மாதிரியாக விதி இருக்கிறதா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது…

மயாங்க் அகர்வால் எங்கே? இவ்வளவு ரன்கள் அளிக்கும் அவருக்கு அணியில் இடம் பெற தகுதி இல்லையா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விதி இருக்குமோ? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அணித் தேர்வாளர்களை கடுமையாக சாடியுள்ளார்.

உண்மையை சொல்லப்போனால் ஹர்பஜன் சிங் படும் கோபம் நியாயமானதுதான். ஏனெனில் கடந்த 2 வருடமாக உள்ளூர் போட்டிகளில் மிகவும் அபாரமாக ஆடி வருபவர் மயாங்க் அகர்வால்.

சென்ற வருடம் உள்ளூர் போட்டிகளில் அனைத்தையும் சேர்த்து 2300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதுவே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அடிக்கப்பட்ட  அதிக ரன் ஆகும். அதேபோல் அடுத்து வந்த ஆஸ்திரேலியா ஏ மற்றும் இங்கிலாந்து ஏ தொடரில் அற்புதமாக ஆடினார் அவர். அவ்வாறிருந்தும் அவருக்கு அணியில் இடம் கிடைக்காதது ஹர்பஜன் சிங்கை மட்டுமல்ல பல இந்திய ரசிகர்களையும் கோபப்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See