Connect with us

Cricket

எதிரணியை மனமுவந்து பாரட்டிய கிரிக்கெட் கடவுள் சச்சின்!!

இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோற்றுவிட்டது நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான நான்காவது நாளில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

இந்த தோல்விக்கு இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். இதன் பின்னர் பல ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களும் இந்திய அணியிடம் என்ன தவறு நேரிட்டது என்பதை விமர்சனமாக முன்வைத்திருந்தனர். பொதுவாக இந்திய ரசிகர்கள் இந்தியாவில் விமர்சித்தது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியில் தாக்கியும் பேசினர். ஆனால் இந்தியாவின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் கடவுள் எனப் போற்றப்படும் அவர் இந்த சாதனையை பாராட்டி புகழ்ந்துள்ளார். மேலும் தொடரை வென்றதற்காக இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டது….

இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். தொடர்ச்சியாக அவர்கள் ஆடும் நல்ல கிரிக்கெட்டிற்கு கிடைத்த வெற்றி இது. சரியான நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் நின்று ஆடி தொடரை வென்றுள்ளனர். இறுதிப் போட்டிக்குச் செல்லும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

என்று அவர் பக்கத்தில் பதிவு செய்தார் கடவுள் சச்சின் டெண்டுல்கர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See