Connect with us

Cricket

எனக்கு சச்சின் மட்டும் தான் உதவினார்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் உருக்கம்!

பல நெருக்கடிகளுக்கு உள்ளான ஸ்ரீசாந்த், தற்போது பிக் பாஸ் ரியாலிட்டி டிவி ஷோ-வில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த், தன் சக போட்டியாளர் ஒருவருடன் சச்சின் குறித்து, ‘சச்சினை என்னால் மறக்கவே முடியாது. 2011 உலக கோப்பையை வென்று ஓரிரு ஆண்டுகள் கழித்து அணியின் அத்தனை வீரர்களையும் ஒன்றாக நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அணியில் அங்கம் வகித்த அனைத்து வீரர்களின் பெயரையும் சொல்லி, சிறப்பாக விளையாடினார்கள் என்று பேசினார். என் பெயர் விடுபட்டது. உடனே சச்சின், ‘உலக கோப்பையை வென்றதில் ஸ்ரீசாந்துக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது’ என்றார். அன்று இரவு முழுவதும் நான் அழுதுக் கொண்டே இருந்தேன்’ என்று உருக்கமாக தெரிவித்தார். இது பிக் பாஸ் வீட்டில் மட்டும் அல்லாமல், அதைப் பார்த்தவர்களையும் நெகிழச் செய்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See