Connect with us

Cricket

என்னை அணியில் எடுப்பார்களா.. இல்லையா என்பது பற்றி தற்போதெல்லாம் யோசிப்பதே இல்லை – சாம்சன் வேதனை

தற்போதெல்லாம் என்னை அணியில் எடுப்பார்கள் என்பது பற்றி யோசிப்பதே இல்லை என இளம் வீரர் சஞ்சு சாம்சன் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் தான் தோனிக்கு மாற்று வீரர் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அணியில் இருந்து மெல்ல மெல்ல ஓரம்கட்டப்பட்டு வருகிறார்.

இந்திய அணிக்காக பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை .ஏனெனில் இவரை விட மிக இளம் வயது ரிசப் பன்ட் அவரது இடத்தை பிடித்துவிட்டார்.  ஆனால் தோனி என்று கூறப்பட்ட சஞ்சு சாம்சன் ஒரு வாய்ப்பு கூட தரப்படாமல் ஓரம் கட்டப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது..

.நான் தற்போதெல்லாம் பெரிதாக எதையும் யோசிப்பதில்லை. என்னை அணியில் எடுப்பார்களா இல்லையா என்பது பற்றி நான் சிந்திப்பது கூட இல்லை. நாம் எப்போதும் ஒரு போட்டியிலேயே நம் மனதை வைத்திருக்க வேண்டும். அதனை தாண்டி நம் மனதை அலைபாய விட்டால் அது நமக்கு வேதனையை தரும்.

என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் சஞ்சு சாம்சன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See