Connect with us

Cricket

என்னை அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஓசாமா பின்லேடன் என்று திட்டினார்கள்: மொயின் அலி வேதனை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ‘ஒசாமா’ என்று அழைத்ததாக அவர் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி. இவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர். அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள அவரது சுயசரிதை நூலில், 2015-ம் ஆண்டு நடந்த ‘ஆசஷ்’ தொடரின்போது ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை ஒசாமா என்று அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

“ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னை பார்த்து. இந்தா இதை வாங்கிக்கொள் ஒசாமா” என்று கூறியதாக மொயின் அலி குறிப்பிட்டுள்ளார். “என்னால் அதை நம்ப முடியவில்லை. நான் கோபத்தில் முகம் சிவந்தேன்.

இந்த சம்பவத்தை நான் என் சக வீரர்களிடம் தெரிவித்தேன். இதை எங்கள் பயிற்சியாளர் ட்ரொவர் பேலிஸ், ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் லேமென்னின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுபற்றி சமந்தப்பட்ட வீரரிடம் கேட்கப்பட்டபோது அவர் நான் அவ்வாறு அழைக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.
ஆனாலும், அன்று முழுக்க நான் கோபமாகவே இருந்தேன்” என்றும் அவர் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See