Connect with us

Cricket

என்னை ஸ்பின்னராக மெருகேற்றியது இவர்தான்: ஆட்டநாயகன் விருதுபெற்ற மொயின் அலி பெருமிதம்

இங்கிலாந்து அணிக்காக கடந்த நான்கைந்து வருடங்களாக அற்புதமாக ஆடி வருவர் மொயின் அலி. இவர் ஒரு சுழற்பந்துவீசும் ஆல் ரவுண்டர் ஆவார். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினே பெரிதாக ஏதும் விக்கெட்டுகள் எடுக்க முடியாத நிலையிலும், ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக இருந்து இந்திய அணியை நிலைகுலையச் செய்தார் மொயின் அலி.

இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சுழல் வலையில் இந்திய வீரர்களை வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

போட்டிக்குப் பின்னர் பேட்டியில் அவர் கூறியதாவது….

மீண்டும் அணிக்குள் வந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு ஒரு சிறிய இடைவேளை தேவைப்பட்டது. அனைத்தையும் பார்த்து நன்கு வளர்ந்துள்ளேன். மீண்டும் எனது கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக ஆடி வருகிறேன்.

இங்கே வெள்ளைசட்டை போட்டுக்கொண்டு அவர்கள் ஆடியபோது நான் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு அவர்களை மிஸ் செய்து கொண்டிருந்தேன். தற்போது மீண்டும் அணிக்குள் வந்து அணியை வெற்றி பெற வைத்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

கவுண்டி கிரிக்கெட் ஆடியதால் எனக்கு சற்று அதிக நம்பிக்கை வந்திருக்கிறது. எங்கள் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக்குடன் அதிக நேரம் உழைத்தேன். நாளுக்கு நாள் அவர் என்னை மெருகேற்றினார். இந்த வெற்றிக்குக் காரணம் அவர்தான் என்று கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See